சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான, இன்றைய இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 37 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றது
இதில் ரவிந்ரா 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி பதிலுக்கு துடுபெடுத்தாடிய இலங்கை அணி 30. 2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டியிலே கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ரீதியில் தொடரை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் இலங்கையின் மஹீஷ் தீக்சன ஹெட்ரிக் சாதனை ஒன்றையும் ஏற்படுத்தினார். அவர் இந்த போட்டியில் 44 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.