சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான இரண்டாவதும்,இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கட்டுகளால் வெற்றி கண்டிருக்கிறது.
அத்துடன் டெஸ்ட் தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி கொண்டிருக்கிறது.
முன்னதாக போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 615 ஓட்டங்களை பெற்றது.
எனினும், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இதன் காரணமாக பாகிஸ்தானை அணி பொலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

இதன்படி, இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 478 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் 58 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தென் ஆபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக தென் ஆபிரிக்க அணியின் ரயன் ரிக்கில்டன் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக மார்க்கோ ஜான்சன் தெரிவு செய்யப்பட்டார்.