இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள்..! இல்லையேல் நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு, நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (03) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது கடற்தொழிலாளர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகளினால், எமது 30 கடற்தொழிலாளர்களின் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எமது கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு இந்திய ரோலர்களினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் கடற்தொழில் அமைச்சர் இந்தியா ரோலர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் பேச்சு வர்த்தை நடத்தினார் தோல்வியில் முடிவடைந்தது.


கச்சதீவில் இருநாட்டு கடற்தொழிலாளர்களையும் அழைத்து பேசினார் தோல்வியில் முடிவடைந்தது.

இவ்வாறு இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தால் நாம் என்ன செய்வது.

ஆகவே நெடுந்தீவில் இருந்து கொண்டு எமது வாழ்வாதார தொழிலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்மை வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டு இந்தியாவுக்கு நெடுந்தீவை ஒப்படையுங்கள் எங்களை வாழ விடுங்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال